வார உரைகல் பிரதம ஆசிரியர் தாக்கப்பட்டார்


(எஃப்.எம்.பர்ஹான்) வார உரைகல் பிரதம ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லாஹ் காத்தான்குடி பிரதான வீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

தமது வார உரைகல் பத்திரிகையை விற்பனை செய்து கொண்டிருந்த சந்தர்பத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்காக தற்சமயம் வார உரைகல் பிரதம ஆசிரியர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் பதிவேற்றப்படும்.
தகவல்-www.pmgg.org