காரைதீவு பிரதேச செயலகத்தின் முதலாவது பிரதேச செயலாளராக பணிபுரிந்த எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் தனது 41 வருட மக்கள் சேவையிலிருந்து 16.01.2012 ம் திகதியுடன் ஓய்வு பெற்றுள்ளார்.
தோன்றிற் புகழோடு தோன்றுக .. என்ற வாசகத்திற்கமைய புகழுடன் தோன்றி புகழுடன் மக்கள் அரச சேவையிலியிருந்து விடைபெறுகிறார்.
தனது நீண்டகால அரச சேவையில் 26 வருடங்களை காரைதீவு பிரதேச செயலக பிரிவு மக்களுக்கு தொடர்ச்சியாகவும் அதே போன்று வினைத்திறன் மிக்கதாகவும் பயன்படுத்தியுள்ளார்.காரைதீவின் முதல் சாஹித்யவிழாவை நடாத்திய அவருக்கு விபுலமாமணி என்ற பட்டம் அப்போதைய அரசாங்க அதிபர் சுனில்கன்னங்கராவினால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச செயலகமானது ஆரம்பத்தில் நிந்தவூர் உதவி அரச அதிபர் அலுவலகத்தில் இருந்து 1985ம் ஆண்டு இனக்கலவரம் காரணமாக தனியானதொரு மேலதிக உதவி அரச அதிபர் அலுவலகமாக ஆரம்பிக்கப்படும் போது முதலாவது உத்தியோகத்தராக அம்பாரை கச்சேரியிலிருந்து இங்கு நியமிக்கப்பட்டார்.
அப்போது அவர் ஒரு எழுதுவினைஞராக இருந்தபோதும் 1985 இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களது புனர்வாழ்வுப் பணிகளில் அயராது செயற்பட்டார். தொடர்ந்து 1988, 1990ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களின் போது அவரது சேவை பலராலும் பாராட்டப்பட்டதுடன் எல்லோராலும் நன்கு பேசப்படும் ஒருவரானார்.
1991ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் காரைதீவுப் பிரதேச செயலகத்துக்கே பிரதேசசெயலாளராக நியமிக்கப்பட்டு; தொடர்ச்சியாக அவ்வலுவலகத்தின் பிரதேச செயலாளராக 21 வருடங்கள் திறமையான சேவையை தனது மக்களுக்காக ஆற்றி இலங்கைத்தீவின் வரலாற்றில் மிக நீண்டகாலங்கள் தொடர்ச்சியாக ஒரு பிரதேசத்தில் கடமையாற்றியவர் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டார்.
பல இன, மத மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் அனைத்து மக்களாலும், அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் சக ஊழியர்களாலும் அன்புடனும், மரியாதையுடனும் மதிக்கப்படும் ஒருவராக திகழ்ந்து வருகின்றார்.
கடந்த 2011 ஜனவரி மாதத்தில் அவர் ஓய்வு பெற்றாலும், அவரது சேவையை மேலும் பெறவேண்டும் என்ற நோக்கோடு மேலும் ஒரு வருடம் ஒப்பந்த அடிப்படையில் அப்பதவியிலேயே மீண்டும் நியமிக்கப்பட்டு 2012 ஜனவரி 16 வரை அவரது சேவை மக்களுக்கு திறம்படக் கிடைக்கச் செய்யப்பட்டது. அவ்வகையில் அம்மக்களும் உத்தியோகத்தர்களும் பாக்கியசாலிகளே.
1951 ஜனவரி 16ல் யாழ்பாணம் அச்சுவேலியில் ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் 05 பிள்ளைகளில் மூத்த மகனாக பிறந்தவர்தான் இராமகிருஷ்ணன் அவர்கள். இவர் காரைதீவின் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் பேத்தி கமலாதேவி சிறப்பு பட்டதாரி, ஓய்வு பெற்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரை தனது மனைவியாக கொண்ட இல்வாழ்க்கையில் ஸ்ரீ சரண்யா, சிறப்பு பட்டதாரியை மகளாகவும், அவரது கணவர் கல்முனை ரெலிகொம் நிறுவன முகாமையாளரான, பொறியியலாளர் யோகேஸ்வரராஜா அவர்களை மருமகனாகவும் கொண்ட குடும்ப வாழ்க்கையை உடையவராவார்.
தனது ஆரம்ப கல்வியை அச்சுவேலி கிறிஸ்தவ கல்லுரி, நீர்வேலி அத்தியர் இந்து கல்லூரியிலும் இடைநிலை கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரி, இந்து கல்லூரி, வந்தாறு மூலை மத்திய மகா வித்தியாலயம் என்பவற்றிலும், உயர்கல்வியை தெல்லிப்பழை மகா வித்தியாலயத்திலும் கற்றுக் கொண்ட இவர் பொது நிர்வாகத்தில் முதுமானிப்பட்டமும் பெற்று நிர்வாக சேவையில் மிகவும் மூத்த திறமைமிக்க அதிகாரியாக அம்பாரை மாவட்ட அரச அதிபருக்கு அடுத்த சேவை முதுமுறையைக்கொண்ட ஒருவராகக் காணப்படுகின்றார்.
ஆரம்பத்தில் 1971ல் புகையிரத திணைக்களத்தில் பொறியியல் உதவியாளராக பயிற்சியை மேற்கொண்ட இவர் பின்னர் எழுதுவினைஞர் சேவையில் இணைந்து கொண்டார். 1973ம் ஆண்டு நிந்தவூர் உப அரச அதிபர் அலுவலகத்திலும், 1978ம் ஆண்டு யாழ்ப்பாணம் கச்சேரியிலும், 1979ம் ஆண்டு கோப்பாய் உதவி அரச அதிபர் அலுவலகத்திலும் கடமையை மேற்கொண்ட இவர் 1980ல் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றியதற்காக சில காலம் தொழில் இழந்து நின்றார்.
1981 செப்டெம்பரில் மீண்டும் நியமனம் பெற்று யாழ் மாவட்ட பதிவகத்திலும் பின்னர் கல்முனை மாவட்ட பதிவகத்திலும், அதைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு அம்பாரை கச்சேரியிலும் கடமையாற்றி பின்னர் 1985ல் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு கடமைக்காக விசேடமாக கச்சேரியினால் நியமிக்கப்பட்டார்.
இவரது பதவிக்காலத்தில் இப்பிரதேசம் மற்றும் அலுவலகம் என்பன துரித வளர்ச்சி கண்டது. காரைதீவு நூலகத்தில் தொடங்கப்பட்டு வளர்ச்சியடைந்து வந்த இவ்அலுவலகம் இன வன்செயலினால் முற்றாக பாதிக்கப்பட்டு செயல் இழந்த போது அதனை தனியார் வீட்டில் மீள ஆரம்பித்து பின்னர் விபுலானந்த மணிமண்டபத்திற்கு இடமாற்றி அங்கு அலுவலகத்தினை நடாத்தி வரும்போது மறைந்த கௌரவ அமைச்சர் மஹ்ரூம் அஸ்ரப் அவர்களின்; உதவியால் பிரதான பாதையில் மிகப்பெரிய கட்டிடங்களுடன் சகல வசதிகளையும் கொண்ட அலுவலகமாக மாற்றியமைத்து இன்று வரை அதனை பலப்படுத்தியுள்ளமையானது, அவரது திறமைக்கும் ஆற்றலுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அம்பாரை அரச அதிபராகக் கடமையாற்றி 3 மாதங்களுக்கு முன்பு இடமாற்றலாகிச் சென்ற திரு சுனில் கன்னங்கரா அவர்கள் பல அதிகாரகள் கலநது கொண்ட தனது பிரியாவிடை வைபவத்தில் இவரைப்பற்றிக்குறிப்பி;டும் போது 'எந்தவித முறைப்பாடுமில்லாமல் தொடர்ச்சியாக சிறந்த சேவையாற்றும் இவரை பிரிந்து செல்வது வேதனையைத் தருகின்றது' என்று கூறியது இவரின் சேவைக்கான சான்றிதழாகும் என்பதனைப் எவரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.
தனது சேவைக்காலத்தில் மற்றுமொரு மனித பேரவலம் சுனாமியினால் ஏற்பட்டு காரைதீவு மக்கள் குடிபெயர்வதற்கு போதிய மாற்று நிலங்கள் இல்லாத நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்களை வேறு இடங்களிலும், வயல் நிலங்களை நிரப்பியும் குடியேற்றிய இவர் கரைச்சை நீரோடையை பாதுகாத்து இரு புறமும் பாதையமைத்து அங்குள்ள நிலங்களை மாளிகைக்காடு அல் ஹூசைன் வித்தியாலயம், சுகாதார சிகிச்சை நிலையம், பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், பள்ளிவாசல், விளையாட்டுக் கழகம், சனசமுக நிலையங்கள் போன்றவற்றிக்கு வழங்கி மக்களினதும், பல்வேறு அமைப்புக்களினதும் பாராடடையும் பெற்றார்.
பல்லின சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை வழர்த்து கலவரம் ஏற்படாது பாது காத்தவர். சுனாமியின் போதும் அதன் பின்னரும் நடைமுறைப்படுத்தப்பட்ட புனர்வாழ்வு நடவடிக்கையின் போது பல பிரதேச செயலகங்கள் மூடப்பட்டும், உடைக்கப்பட்டும் மக்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்திய போதும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மக்கள் தொடர்ந்து தங்களது சேவைகளையும் தேவைகளையும் பெற்ற ஒரே அலுவலகமாக இவரினால் வழி நடத்தப்பட்ட காரைதீவுப்பிரதேசசெயலகம் திகழ்ந்தது என்றால் அது இவரின் திறமைக்கு மற்றுமோர்
சான்றாகும். பல பாடசாலைகள் மற்றும் சனசமூக நிலையங்களுக்கு கட்டடங்களை வழங்கிய இவர் பல பாதைகளை திட்டமிட்டு அமைத்ததுடன் இலங்கையிலேயே முதன் முதலாக தையல் பயிற்சி நிலையத்திற்கான கட்டடத்தை அமைத்து அம் மக்களின் தேவைகளைப் புர்த்திசெய்தார். அம்பாரை மாவட்டத்தில் எங்கும் இல்லாதவாறு இப்பிரதேசத்தில் பல சனசமூக நிலையங்கள் உருவாக காரணமாக இருந்தார்.
பிரதேச செயலகம், பிரதேச சபைகளை உருவாக்குவதற்கு முதன்மையாளராக செயல்பட்ட இவர் இங்குள்ள முஸ்லிம் மக்களை தன் பக்கம் ஈர்ந்து இக்கோரிக்கையை முன்னெடுப்பதற்கு தூண்டுகோலாக இருந்ததுடன் அமைச்சர் அஸ்ரப்பின் நட்புடன் பிரதேச செயலகப்பிரிவு உருவாக்கம் பெற காரணமாக இருந்தார். கிழக்கு மாகாண முதன்மைச் செயலாளர் இவரின் அலுவலகத் தோழர் என்ற வகையில் பிரதேச சபையை உருவாக்க முன்னின்று உழைத்து அதில் வெற்றியும் ஈட்டினார்.
காரைதீவு ப.நோ.கூட்டுறவுச் சநு;;கம் கலைக்கப்படவிருந்த காலத்தில் விசேட ஆணையாளராக நியமிக்கப்பட்டு அக்கண்டத்திலிருந்து காப்பாற்றிய பெருமை இவரையே சாரும். ஆக்காலத்தில் சந்கத்தை மீண்டும் உயிர்ப்புடன் இங்;கச்செய்த இவர் ஒழுங்கான நிரவாகத்தைத் தெரிந்து கையளித்தாhர்
அலவலக உத்தியோகத்தர்களிடையே ஒற்றுமையை உருவாக்கி ஒரு குழுவாக செயற்பட வைத்தார். ஊழியர் நலன்புரிச் சங்கம், சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கங்கள் என்பனவ்றறை ஏற்படுத்தி சிறப்பாக நடைபெற வைத்தார். இப்பிரதேச உத்தியோகத்தர்கள் ஒரு லெட்சம் ரூபாவரை கடன் பெற வசதி ஏற்படுத்தி கொடுத்தார். உகந்தை முருகன் ஆலயத்திற்கு கிணறு கட்டிக்கொடுத்ததுடன், கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் திருவெம்பாவை உற்சவத்தில் அலுவலகம் சார்பாக புசையையும் நடாத்தி சமயப் பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்துளள்ளளார். தனது சேவைக்காலத்தில் புலமைப்பரிசு பெற்று தாய்லாந்து, புதுடில்லி மற்றும் இங்கிலாந்து தேசங்களுக்குச் சென்று சிறந்த பயிற்சிகளைப்பெற்றார். தொழிற்சங்கங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்ட இவர் புகையிரத திணைக்களத்தில் சேவை புரிந்தபோது முதன் முறையாக ஒரு பத்திரிகையை வெளியிட்டு சாதனை படைத்தார்.
எழுதுவினைஞர் சங்க கல்முனை, யாழ்க்கிளையின் செயலாளராகவும் அம்பாரை மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் சங்க உபதலைவராகவும் சேவையாற்றியவர். அச்சு வேலியில் வசித்தபோது செயலிழந்து இருந்த மத்திய சனசமுக நிலையத்தை புதுப்பித்து அதற்காக கட்டிடம் அமைத்து, காலம் சென்ற அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நவரெட்ணம் போன்ற பாராளமன்ற உறுப்பினர்களை அழைத்து பெருவிழா எடுத்து அழகுபார்த்தவர்.காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும், போசகராகவும் பல சிக்கன கூட்டுறவுச் சங்கங்களின் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமுக நிலையங்களின் போசகராக இருந்து அவற்றின் முன்னேற்றத்திற்கு வழியமைத்தார்.
கலாசார பேரவையை உருவாக்கி கலாசார விழாக்களை நடாத்தி இங்குள்ள தலைவர்கள், படைப்பாளிகள் ஏனைய துறைகளில் சிறந்தவர்களுக்கு பட்டம், விருதுகள் வழங்கி கௌரவிக்க காரண கர்த்தாவாக விளங்கினார்.இப்பிரதேசத்தின் வளர்ச்சி இன ஒற்றுமை, ஆடம்பரமின்மை, கல்வி மேன்மை, சகலரையும் ஒன்றாகப் பார்த்தார். ஏழை எளியவர்களுக்கு முன்னுரிமை எப்போதும் எந்த வேளையிலும் சேவை புரிதல் போன்ற பல நற்குணங்களையும் தன்னோடு கொண்ட, என்றும் இளைஞர் போன்ற தோற்றம் கொண்ட விபுலமாமணி இராமகிருஸ்ணன் அவர்கள் வாழ்வு மேலும் சிறக்க வேண்டும்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா












