மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டத்தில் மழை காரணமாக நெல் அறுவடைகள் பாதிப்பு

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் மழைக்காரணமாக நெற் அறுவடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 51.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும், இவ்வருடத்தில் கடந்த தை மாதம் முதல் இதுவரையான காலப்பகுதயில் 143.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர அதிகாரி ஏ.எம்.சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 115.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான மைய கடமை நேர அதிகாரி எம்.ஐ.ஏ.நயீம் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் நெல் அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவை மழை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
இதேவேளை, இங்கு தொடந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறே காணப்படுவதாகவும், கடல் கொந்தளிப்பாக காணப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் இடைக்கிடை பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடலுக்கு செல்லும் மீனவர்கள் அவதானமாக இருக்கும் படியும் அவர் தெரிவித்தார்.
--