இன்று காலை முதல் மட்டக்களப்பு விகாரைக்கு முன்னால்; விகாராதிபதி அம்பிற்றிய சுமன ரத்தின தேரர் அவர்கள் தலைமையில் சிங்கள முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகளைத் தீரத்துத்தருமாறறு கோரி ஏற்கனவே விகராதிபதி அவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதன் பிரகாரம் உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச்சங்க நிருவாகத்தினர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருந்தார்கள் .
இன்று ஸ்தலத்துக்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கௌரவ விநாயாகமூர்த்தி முரளிதரன் அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விகாராதிபதி மற்றும் நலன்புரிச்சங்க நிருவாகத்தினர்களுடனும் கலந்துரையாடி இறுதியாக இந்த மாதத்திற்குள் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு தீர்துத்தருவதாக நம்பிக்கை தரும் வகையில் வாக்குறுதி அளித்தார்
இதன் பிரகாரம் உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது












