கிருஸ்ணாமட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று வெகு விமர்சiயாக இடம்பெற்றது.
ஆசிரியர் கலாசாலையின் ஏ.யோகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த விளையாட்டுப்போட்டியில் கல்வி அமைச்சின் ஆசிரியக்கல்வி நிர்வாக உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.எப்.என்.ஹரிஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் டேவிட்,ஹாலி எல ஆசிரியர் கலாசாலையின் இணைப்பாளர் லோகேஸ்வரன் உட்பட பலர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.
கலைமகள்,அலைமகள்,திருமகள் ஆகிய மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு மெய்வல்லுனர் போட்டிகள் நடத்தப்பட்டதுடன் நடத்தப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் கலைமகள் இல்லம் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் போட்டிகளில் சம்பியன் பட்டம் பெற்றவர்களுக்கும் சிறப்புப்பரிசுகளும் வழங்கப்பட்டன.




































