'பொதுமக்களுக்கும், பொலிசாருக்கும் இடையிலான நட்புறவு'

'பொதுமக்களுக்கும், பொலிசாருக்கும் இடையிலான நட்புறவு' என்னும் தலைப்பு இக்காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமானதொரு தலைப்பாகும். மட்டக்களப்பு கரித்தாஸ் - எகெட் நிறுவகத்தின் தேசிய சமாதானப்பிரிவானது கிராம மட்டத்தில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகளை தங்கள் செயற்திட்டத்தில் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்கமைவான ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று 14.02.2012 நடைபெற்றது. மைலம்பாவெளி கிராமசேவகர் பிரிவை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வானது கரித்தாஸ் - எகெட் நிறுவகத்தின் அவையக சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றது. பொதுமக்கள் மீது அரசாங்கம் கூடிய கவனம் கொண்டுள்ளது. அதனை மக்கள் உணர முடியாதுள்ளனர். தற்போது ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு 02 பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்னும் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டு, கிராமங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிக்கான தீர்வுகளை மக்களுக்கு வழங்குகின்றனர். இரவு வேளைகளிலும் இவர்கள் தங்கள் கடமைகளை ஆற்றுகின்றனர். 30 வருட கால யுத்ததத்தின்போது தமிழ் மக்கள் பொலிசுக்குச் சென்று தமது பிரச்சினைகளைக் கூறப் பயத்துடன் இருந்தனர். தற்போது இந்நிலை மாறி விட்டது. மக்களைப் பொலிஸ் நாடிப் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் விழிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. இன்றைய கலந்துரையாடல் நிகழ்வு பொதுமக்கள், பொலிஸாருக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் என நாம் நம்புகிறோம்' பொலிசார் பொதுமக்களின் பாதுகாவலர்கள் எனும் மனப்பக்குவம் மக்கள் மத்தியில் வளரத்தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் இந்நிகழ்வானது மிகவும் பொருத்தமானதொன்றாகும்.
இந்நிகழ்வில் சுமார் 140 பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். பொலிஸ் பிரிவின் சார்பில் பெண்கள், சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளான சாஜன் திரு. சு. மனோகரன், திருமதி. கிருபைராணி, மற்றும்; திருமதி யோகேஸ்வரி சேகர ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றினர். அத்தோடு கிராமசேவை உத்தியோகத்தர் திரு ஜெயகோசன் அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்







(எஃப்.எம்.பர்ஹான்)
.