ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாகர் மகா வித்தியாலயத்தின் 2012ம் ஆண்டிற்கான வருடார்ந்த இல்ல விளையாட்டுப்போட்டி வித்தியாலயத்தின் அதிபர் சந்திரகுமார் தலைமையில் இன்று(22.02.2012) இடம்பெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜாவும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.












