கிரான்குளம் பிரதேச விளையாடடுக் கழகத்திற்கு உடல் வலுவூட்டல் உபகரணங்கள்


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் நிதி ஒதுக்கீடின் கீழ்
கிரான்குளம் பிரதேச விளையாடடுக் கழகத்திற்கு உடல் வலுவூட்டல் உபகரணங்கள்
வழங்கி வைக்கப்பட்டது. கிரான்குளம் பிரதேச இளைஞர் கழகத்தின் கோரிக்கையினை
அடுத்து மிக நீண்டகாலத் தேவையாக இருந்த உடல் வலுவூட்டல் உபகரணங்களின் ஒரு
தொகை இன்று இளைஞர் கழகத்திடம் கையளிக்கப்பட்டது. கிரான்குளம் பொது நூலக
கேட்போர் கூடத்தில் பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி தலைமையில் ஏற்பாடு
செய்யப்பட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்
கலந்து கொண்டு இளைஞர்களின் விளையாட்டு அபிவிருத்தி தொடர்பாகவும்,
மண்முனைப்பற்று பிரதேசத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டு இவை கையளிக்கப்பட்டது