நாடு நகர திட்டமிடல் சட்டத்தை தோற்கடிக்க அனைத்து மாகாண சபை உறுப்பினர்களையும் ஒன்றுபடுமாறு வேண்டுகோள்.

(பிரணி)

நாடு நகர திட்டமிடல் சட்டத்தை தோற்கடிக்க அனைத்து மாகாண சபை
உறுப்பினர்களையும் ஒன்றுபடுமாறு மாகாண சபை உறுப்பினர் மாசிலாமணி வேண்டுகோள்.
நாடு நகர திட்டமிடல் சட்டம் என்ற தலைப்பில் இந்தஅரசினால் காணிஅபகரிப்புச்
சட்டம் மீண்டும் எம் முன் கொண்டுவரப்பட்டுள்ளது.மீண்டும் உயிர்தெழுப்பபட்ட இச்
சட்ட மூலம் எந்த ஒரு காணியையும் அரசுதான் விரும்பும் எப்போதாவது ஒருகசட்
அறிவித்தல் மூலம் பொருளாதார,சமூக,சரித்திர,சுற்றாடல்,புனித இடமாக
முக்கியத்துவமானதாக் காட்டி அதை சுவீகரிக்க முடியும். இன,மத,கட்சி பேதமின்றி
எமக்காக அல்லாமல் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் சோகம் நிறைந்த
அவலவாழ்வுக்கு முறு;றுப்புள்ளிவைத்து அவர்கள் வசமுள்ள காணிமற்றும் சொத்துக்களை
காப்பாற்ற அடக்கு முறைகளுக்கும் சலுகைகளுக்கும் அப்பால் சென்று ஒருமித்து இந்த சட்ட
மூலத்தை எதிர்த்துவாக்களிக்கமாறு சகல கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும்
மாகாண சபை உறுப்பினர் ரி.மாசிலாமணி கோரியுள்ளார்.
ஆவர் சகல மாகண சபை உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும்
தெரிவித்துள்ளதாவது,
இச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பொழுது காணி மாகாண சபைகளுக்காக
இலங்கை யாப்பின் மூலம் பிரித்தொதுக்கப்பட்ட தலைப்பாக இருபபதால்; முதலில்
இச்சட்ட மூலம் மாகாணசபைகளின் ஒப்புதலை பெறவேண்டுமென உயர் நீதிமன்றம்
தீர்ப்;பளித்தது.
மாசிமாதம் 08ம் திகதிக்குமுன் மாகாண சபைகளின் ஒப்புதல் பெறவேண்டும்.பின்னர்
அந்தச் சட்ட மூலம் புதன் கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவேண்டும் என்ற
விபரம் னுயுஐடுலு ஆஐசுசுழுசு பத்திரிகை 01.02.2012 அன்று பிரசுரிக்கபட்டிருந்தது.
சுpல மாகாணசபைகள் ராஜபக்ஐகளினால் கட்டுப்படுத்தப்படும் அல்லது அவர்களுக்கு
அடிமைச்சாசனம் எழுதி விட்டுதம் மக்களுக்காக அல்லாமல் தமக்கு கிடைக்கும்,அல்லது
கிடைக்கும் எனஅனுமானிக்கப்பட்டும் சலுகைகளுக்காக இச் சட்டமூலத்தை
அங்கீகரித்திருந்தாலும் கிழக்குமாகாண சபை தம் மக்களின் நலனுக்காக அரசுக்கு
சவாலாக இந் சட்டமூத்தை நிராகரிக்குமென அரசு திடமாக நம்புவதால் அவசர அவசரமாக
பலதந்திரங்களை கையாண்டு 08ம் திகதி கட்சித்தலைவர்களின் கூட்டத்தை நடாத்தி
சபையில் அல்லாது கட்சித் தலைவர்கள் மத்தியில் இதற்கான ஒப்புதலை பெற
ஆராயப்பட்டுள்ளது.
எமது ஒப்புதலை பெறுவதற்காக சட்டத்திற்கு புறம்பான முறையில் சில நடவடிக்கைகளை
மேற்கொண்டு எம்மை நிர்பந்திக்ககூடும.; கடந்தகாலங்களில் இவற்றை நாம்
கண்டிருக்கிறோம் ......அனுபவித்திருக்கின்றோம்.
இச் சட்ட மூலம் நிறைவேற்றபடுமானால் யாப்பு மூலம் எமக்கு அளிக்கப்பட்டிருந்த காணி
அதிகாரம் அனைத்தையும் அரசுக்கு அடிமைச்சாசனம் எழுதி மக்கள்,மற்றும் அவர்களின்
சொத்துக்கள் அனைத்தையும் அரசுக்கு தாரைவார்த்து கொடுத்த துரோகிகளாவோம்.
இச் சட்ட மூலம் நிறைவேற்றபடுமானால் கிழக்கு முதல் மேற்குவரை,வடக்குமுதல்
தெற்குவரை உள்ளகாணிகள் சிங்களவர்,தமிழர்,முஸ்லீம் எவருக்கு சொந்தமானாலும்
ஏழைகளின் சில பேர்ச் காணி முதல் பணக்காரர் வசமுள்ள பலஏக்கர் காணிகள் வரை
அரசு இலகுவில் கைபற்றும் அபாயமுள்ளது.
இந்த அரசின் முக்கியமானவர்களின் காணிப் பசிக்கு தீனிபோட இந்த அரசு எதை
வேண்டுமானாலும் செய்யும்.
100 வருடங்களுக்கு மேலாக கொழும்பில் தொழிற்பட்டுவரும் நீதிமன்றத் தொகுதியை
அரசாங்கம் வேறு இடத்திற்கு மாற்றதீர் மானித்துள்ளதாக ஊநுலுடுழுN வுழுனுயுலு
02.02.2012 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த இடம் துப்பரவு செய்யப்பட்டு
இந்தியர்களுக்கோ பெரும்பாலும் சீனர்களுக்கோ விற்கப்படலாhம்.
வெலிக்கடை சிறைச்சாலையில் சமீபத்தில் கட்டங்கள் எரிக்கப்பட்டமை
சிறைச்சாலை வேறு இடத்திற்கு மாற்றப்படவும் அதனை சீனாவிற்குவிற்பதற்காகவும் கூட
இருக்கலாம்.
இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றபட்டால் ஏழைமுதல் பணக்காரன்வரை–கோவில் முதல்
பள்ளிவாசல், விகாரை முதலானவற்றிற்கு சொந்தமான எந்த நிலங்களையும்
கைப்பற்றமுடியும்
இவ்வாறானதொரு சட்டமூலமே இல்லாத காலத்தில் கூட கொழும்பு இராணுவத்தலமையகம்
சீனருக்கு கொடுக்கப்பட்டது. தனியாருக்கு சொந்தமான காணிகள் வகை தொகையின்றி
அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. ஆதைவிட அதிவேகபாதை அபிவிருத்தி, புதிய
விமானநிலைய அபிவிருத்தி பதிய துறைமுக அபிவிருத்தி என்று எண்ணிலடங்கா ஏழைகளின்
நிலம் கைப்பற்றபட்டது ஆனால் இது வரைஅவர்களுக்கு எதுவித நஸ்ரஈடும்
வழங்கப்படவில்லை
இவ்வாறு சட்ட விரோதமாக அரசு ஏழைகள்,நடுத்தர வகுப்பார்,பணக்காரார் எனப்பாராது
மக்களின் சொத்துக்களை இச் சட்ட மூலம் நிறைவேற்றப்படுமானால் சட்டபூர்வமாக
அரசு கைப்பற்ற ஏதுவாக அமையும்.
இச் சட்ட மூலம் சிங்கள,தமிழ்,முஸ்லீம் மக்களுக்கு எதிரான சட்ட மூலமாக
இருப்பதனால் கிடைக்கும் அற்பசலுகைகளை துச்சமாக நினைத்து மக்களின்
அவலநிலையைமட்டும் கருத்திற்கொண்டு நாம் ஒற்றுமையுடன் சகல பேதங்களையும் களைந்து
இச் சட்டமூலத்தை தோற்கடிததாக வேண்டியநிலை உருவாகியுள்ளது அல்லது நாம் நம் எதிர்
காலசந்ததியினரால் சமுக்த்தின் துரோகிகளாகவே கருதப்படுவோம்
இச் சட்டமூலம் சகல அரசியல் கட்சிகளையும்,பாராளுமன்றஉறுப்பினர்களையும,;ஏன்
அமைச்சர்களையும் கூடகட்டுப்படுத்தும் ஒருநடவடிக்கையாகும்.
இந்தச் சட்ட மூலம் மாகாணசபைகளின் தோற்றத்திற்குவழிவகுத்த 13ம்
திருத்தத்திற்கு எதிரானது அதாவது ஜனாதிபதியால் வாக்களிக்கப்பட்ட 13 பிளஸ்
இப்போது 13-13 (ஸ்ரீ0) என்றுமாறி இருக்கிறது.
ஜனநாயக்தை கேலிக்கூத்தாக மாற்றும்'ஆசியாவின் மகா அதியமாக'அரங்கேற்றப்படும்
ஒரு நாடகமாக அமைகிறது.
'மாகாண சபைகளுக்கு காணி,பொலீஸ் அதிகாரங்களை வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம்
இல்லை'என்று கௌரவபசில் ராஜபக்ஐ தெளிவாக கூறியுள்ளார் என்று ளுசுஐடுயுNமுயு ஆஐசுசுழுசு
21.01.2012 இல் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே இன,மத,கட்சி பேதமின்றி எமக்காக அல்லாமல் நாம் பிரதிநிதித்துவம்
செய்யும் மக்களின் சோகம் நிறைந்த அவலவாழ்வுக்கு முறு;றுப்புள்ளிவைத்து அவர்கள்
வசமுள்ள காணி மற்றும் சொத்துக்களை காப்பாற்ற அடக்கு முறைகளுக்கும் சலுகைகளுக்கும்
அப்பால் சென்று ஒருமித்து இந்த சட்ட மூலத்தை எதிர்த்து வாக்களிக்க ஒன்றுபட
வேண்டியகாலத்தின் கட்டாயத்திற்கு அமைய இந்த சட்டமூலத்தை நிராகரிக்க
துன்பத்தில் உழலும் எம் மக்களின் சார்பாக அனைவரையும் பணிவாக அழைக்கிறேன்
எனவம் அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


--