(பிரணி)
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நொச்சிமுனைக் கிராமத்திலிருந்து அசாதாரண சூழ்நிலையினால் கடந்த 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம் பெயர்ந்து காத்தான்குடியில் வாழ்ந்து வரும் குடும்பங்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மட்டக்களப்பு மாநகர சபை மேயருக்கு கடிதமென்றை அனுப்பி வைத்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் மட்டக்களப்பு நொச்சிமுனைக் கிராமத்தில் குடியிருந்த 32 முஸ்லிம் குடும்பங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 10 ஏக்கர் காணி ஒன்றில் குடியிருந்து வருகின்றனர். தற்போது யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இடம் பெயர்ந்து மக்கள் சொந்த இடங்களுக்கு மீழ்குடியேற்றப்படும் சூழ் நிலையில் இந்த நொச்சிமுனைக் கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்களையும் மீளக்குடியேற்றம் செய்வதற்கு ஆவன
செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக மேற்படி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்களின் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடித்தின் பிரதிகள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி
முரளிதரன், கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

--