கல்லடி வேலுர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான அலங்கார சடங்கு உற்சவம்

மட்டக்களப்பு கல்லடி வேலுர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான அலங்கார சடங்கு உற்சவம் -2012.



மட்டக்களப்பு கல்லடி வேலுர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான அலங்கார சடங்கு உற்சவம் கர வருட பங்குனித்திங்கள் 17ம் நாள் (30.03.2012) வெள்ளிக்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி பங்குனித்திங்கள் 23ம் நாள் (05.04.2012) வியாழக்கிழமை பங்குனி உத்தர நட்சத்திரத்தில் தீ மிதிப்புடன் இனிது நிறைவு பெறும்.

அம்மன் சடங்கு வைபவமாக 30.03.2012 திருக்கும்பம் வைத்தல் (அமரர். கதிரமலை,கந்தையா குடும்பம்.) 31.03.2012 (விNஷட பூசை 02ம் குறிச்சி பொது மக்கள்) 01.04.2012 (ஊர் வலமும், ஊர்காவல் பண்ணலும் 03ம் குறிச்சி பொதுமக்கள்) 02.04.2012 (பலி திட்டமிடல் 01ம் குறிச்சி பொது மக்கள்) 03.04.2012 (கன்னிமார் சடங்கு 04ம் குறிச்சி பொது மக்கள்.) 04.04.2012 (நெற்குற்றல், சக்கி மகா பூஜை 05ம் குறிசச்சி பொது மக்கள்) 05.04.2012 (விநாயகர் பானை வலம் வருதல,மாலை 06.00 தேவாதிகள் அடியார்கள் மஞ்சள் பூசுதல்,கடல் நீராடல்,தீ மிதித்தல். பொதுச்சடங்கும்) நடைபெறும்

07.04.2012 வைரவர் பூஜையும் நடைபெறும்
குறிப்பு : தினமும் உற்சவ கால பூஜை பிற்பகல் 02.30மணிக்கும் அர்த்தசாம பூஜை இரவு 09.30மணிக்கும் இடம் பெற உள்ளது

அனைவரும் வருக! அம்மன் அருளினைப் பெறுக!
--