ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துமாறு கிழக்கு மாகாண சபை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் ! இரா.துரைரெட்னம்

கிருஸ்ணா

அமெரிக்காவினால் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துமாறு கிழக்கு மாகாண சபை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் மாகாணசபை அமர்வில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணசபை மாதாந்தக்கூட்டம் கௌரவ சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.


இதில் பொது ஜன ஜக்கிய முன்னணி ஆளும்தரப்பு கௌரவ உறுப்பினர் டி. எஸ்.ஆர் சாந்த பிரேமரெத்தினவால் பாராளுமன்றத்தில் இனப்பிரச்சனைகளுக்கு பொருத்தமான தீர்வுகளைக் கட்டறிவதற்காக ஜனாதிபதியின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்ட உபகுழுவில் மாகாணசபை உறுப்பினர்களும் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்னும் பிரேரiணையை முன்மொழிந்தார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் இரா.துரைரெத்தினம் ஆற்றிய உரையின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முதலில் சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்னும் கருத்துக்களை எமது சபையிலும் சிக்களமக்கள் மத்தியிலும் ஒருசகோதர இனத்தின் குடிமகன் முயற்சிகளை எடுப்பது என்றவகையில் எமது கௌரவ உறுப்பினர் அவர்களை நான் பாராட்டுகின்றேன்.

எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது 1987 ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தமூடாக இலங்கை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டு 13ஆவது சட்டதிருத்தம் இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளபட்டது குறிப்பிடத்தக்கதாகும்

இவ்வாறு சட்டவாக்கம் செய்யப்பட்ட ஒன்றை 24 வருடங்களுக்கும் மேலாக வழங்காமல் இழுத்தடிப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றல்ல. இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளை ஏமாற்றிய இலங்கை மத்திய அரசின் இப்போக்கை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் .

24 வருடங்களாக இனப்பிரச்சினைகான தீர்வை எட்டுவதில் பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 1990 ஆண்டு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள் காணி, பொலி;ஸ், நீதி ,நிதி ,மத்திய மாகாண பொதுநிரல், வரிஅறவீடு உட்பட 19 அம்சகோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசிற்கு வடகிழக்கு மாகாணசபை கோரிக்கைகளை முன்வைத்தது. இவ்வதிகாரங்களை தரமறுக்கும்பட்சத்தில் நாங்கள் இவ்மாகாணசபையை நடாத்தமுடியாது எனக்கூறினோம் அதிகாரப்பரவலாக்கலை செய்வதற்கு பதிலாக அரசால் வடகிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது .

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாடு பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதியினால் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டபோது அது எரிக்கப்பட்டது

நோர்வேயின் மத்தியஸ்த்தின் கீழ் அரசு புலிகள் பேச்சுவார்த்தை இதுவும் மீண்டும் தோல்வியில் முடிந்தது

சட்டமாக்கப்பட்ட13திருத்தசட்டத்தை செயல்படவைக்காத அரசு சட்டமாக்கப்படாமல் பேசப்படும் விடயங்களை எவ்வாறு செய்யப்போகின்றது. கடந்த காலத்தில் பல சக்திகளாலும் பலதடவைகள் இனப்பிரச்சினை தொடர்பாக பேசிப்பேசி தமிழர்களாகிய நாங்கள் ஏமாற்றப்பட்டது வரலாறு.

இதனால் இலங்கை அரசு தொடர்பாக தமிழ்மக்கள் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர். தற்சமையம் ஐ.நா. அமெரிக்காவால் இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களான மனித உரிமை மீறல், இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்தவிடயங்களை நடைமுறைபடுத்துமாறு இலங்கை அரசை கோரியுள்ளது.

இந்த அமெரிக்காவின் முடிவை ஆதரிக்கவேண்டிய கடப்பாடு தமிழ்மக்கள் அனைவருக்கும் உண்டு.இந்த நிலையில் கௌரவ உறுப்பினரின் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.அதற்கு நான் எதிர்ப்புத்தெரிவிக்கின்றேன்.

எனவே ஐ.நாவில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு ஏற்ப கிழக்கு மாகாணசபை இலங்கை மத்திய அரசை ஆணைக்குழுவின் தீர்மானத்தை நடைமுறைபடுத்துமாறு கோருவதற்கு முன்வரவேண்டும் எனவும் அவர்கோரிக்கை விடுத்தார்.
--