பல்வேறு இறுவெட்டுகள் வெளியாகும் இக் காலகட்டத்தில் ஆண்டவர் மகிமை பாடும் பாடல்கள் அடங்கிய இறுவெட்டுகள் அரிதாகவே காணப்படுகின்றன இக் காலகட்டதில் ஆண்டவர் மகிமை நிறைந்த செல்வன் சரனின் ஆராதனை கீதங்கள் பாகம் - 02 இறுவெட்டு வெளியீடானது 2012.04.12 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் டச்பார் புனித இஞ்ஞாசியார் பங்கு ஆலயத்தில் வெளியிடப்பட்டது.
இவ் வெளியீட்டு நிகழ்வானது புனித இஞ்ஞாசியார் ஆலய பங்குத் தந்தை யோன் யோசப்மேரி சுவாமிகளின் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் இயேசு சபை மேலாளர் போல் சற்குணநாயகம் அடிகளாரும் மேலும் அருட் தந்தையர்களான ரஜீவன் அடிகளாரும் அன்னதாஸ் அடிகளாரும் தேவதாஸ் அடிகளாரும் இணை பங்குத் தந்தை ஜீவராஜ் அடிகளாரும் பங்கு மக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இன் நிகழ்வின் போது அருட் தந்தை ரஜீவன் அடிகளாரின் நற்கருணை ஆண்டவரின் பிரசண்னம் பற்றிய ஆராதணையும் பிரசங்கமும் நடைபெற்றதானது பங்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இருந்ததாக பங்கு மக்கள் கூறியிருந்தார்கள்.















