காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வின் முயற்சியினால் 100 மில்லியன் செலவில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.

காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வின் முயற்சியினால் 100 மில்லியன் செலவில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.
(பிரதியமைச்சரின் ஊடகபிரிவு)


ஜமைக்க திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபைகுட்பட்ட 5 வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான முதல் கட்ட வேலைகளின் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளது. இன் நிகழ்வில் மட்டகிளப்பு மாவட்ட
அபிவிருத்தி குழுவின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான ஆ.டு.யு.ஆ. ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை இந்நிகழ்வின் விசேட அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பு நிர்மான கிராமிய மின்சார மற்றும் நீர்வளங்கள் அமைச்சர் எம் எஸ் உதுமாலெப்பை அவர்களும் கலந்து சிறபிக்கவுள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் ஏராளமான மக்கள் பெரிதும் நன்மையடிவார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது என பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளன ர்.
(பிரதியமைச்சரின் ஊடகஇணைப்பாளர் அளஅ.ஸஜி)
--