மேஷம் - 2012 சித்திரை புது வருட ராசி பலன்

மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.

மேஷம் - 2012 சித்திரை புது வருட ராசி பலன்
 ஜன்ம ராசியில் சூரியன், குரு இருப்பது மகாயோகமாகும். 5, 9-க்குரியவர்கள் ஒன்று கூடியிருப்பதாலும், ராசியாதிபதி செவ்வாய் 5-ல் அமர்ந்து, குருவால் பார்க்கப்படுவதாலும் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். உயர் பதவி, பொறுப்புக்கள் கிடைக்கும். அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மின்சாரம், நெருப்பு, எரிபொருள் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும்.

 சுக்கிர பலத்தால் கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். 7-ல் சனி இருப்பதால் வாழ்க்கைத்துணைவரால் சில பிரச்னைகளும் ஏற்படும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் பிற மொழி, மத, இனக்காரர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வீண்வம்பு கூடாது. அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம்.

 17-5-2012 முதல் குரு 2-ஆமிடம் மாறி, 6, 8, 10-ஆம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் குதூகலம் கூடும்.
 பணவரவு அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். பிரச்னைகள் எளிதில் தீரும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். மதாபிமானம் கூடும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். புதிய சொத்துக்கள் சேரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் ஆதாயம் கிடைக்கும். ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 13க்குள் தொழில் ரீதியாக முன்னேற்றம் காணலாம். ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 27 வரையிலும் உள்ள காலம் சோதனையானது.

 வாழ்க்கைத்துணைவராலும் கூட்டாளிகளாலும் பிரச்னைகள் சூழும். மன அமைதி கெடும். டிசம்பர் 18 முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை உள்ள காலத்தில் சாதனை பல ஆற்றுவீர்கள். சொத்துக்களின் சேர்க்கையும் அவற்றால் ஆதாயமும் கிடைக்கும்.

 வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். டிசம்பர் 23 முதல் ராகு 7-ஆமிடத்துக்கு இடம் மாறி, சனியோடு கூடுவதும், கேது ஜன்ம ராசியில் உலவுவதும் சிறப்பாகாது. பெண்களாலும் கூட்டாளிகளாலும் பிரச்னைகள் அதிகமாகும்.
 வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. பயணத்தால் சங்கடம் உண்டாகும். பரிகாரம்: செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபடுங்கள். சனிப் பிரீதி செய்வது அவசியமாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்கையை வழிபடுவது நல்லது.