கடகம்:புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய.சூரியன், சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உள்ள நிலையில் இப்புத்தாண்டு பிறக்கிறது. அரசியல், அரசாங்க விவகாரங்கள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். மின்சாதனங்கள், எரிபொருட்கள் ஆகியவை லாபம் தரும். பொருளாதார நிலை உயரும். முக்கியஸ்தர்களும், மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்கள் முன்னணிக்கு உயருவார்கள். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும்.
மே 17-ஆம் தேதி முதல் குரு 11-ஆமிடம் மாறி உங்கள் ராசிக்கு 3, 5, 7-ஆம் இடங்களைப் பார்ப்பதால் வெற்றிகள் குவியும். தொட்டது துலங்கும். பொன், பொருள் சேரும்.
உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். மனத்துணிவு கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றுவதற்குரிய வாய்ப்பு கனிந்துவரும். வழக்கில் வெற்றி கிட்டும். தந்தையால் நலம் ஏற்படும். பிதுரார்ஜித சொத்துக்கள் சேரும். தெய்வப் பிரார்த்தனைகள் ஈடேறும். சாதுக்கள், மகான்கள் ஆசிகள் கிடைக்கும்.
சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். தொழிலாளர்கள், விவசாயிகள், அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் உண்டாகும். பெற்றோர் நலம் பாதிக்கும். உற்றார்-உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும்.
கெட்டவர்களின் தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் அவப்பெயருக்கு ஆளாகாமல் தப்பலாம். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: சனி, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.












