களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் கழகத்தின் 46வது வருடாந்த விளையாட்டு & கலைவிழா

by ஹரி & உமா களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 46வது  வருடாந்த விளையாட்டு விழாவானது நேற்று (21.04.2012) மரதன் ஓட்டத்துடன் ஆரம்பமாகியது. அத்துடன் இன்றைய நிகழ்வின் முதல் நிகழ்வான சைக்கிள் ஓட்டப்போட்டியானது களுவாஞ்சிகுடி நகரில் ஆரம்பித்து கல்முனை வரை சென்று மீண்டும் மட்டக்களப்பு நகரை சென்று அங்கிருந்து களுவாஞ்சிகுடி விஷ்ணு ஆலயத்துக்கு முன்பாக முடிவடைந்தது. இன்று பி.ப 2 மணியளவில் பிரதான விளையாட்டு நிகழ்வானது மட்/சரஸ்வதி வித்தியாலய ஒலிம்பிக் மைதானத்தில் கழகத்தலைவர் திரு. க. ஜெகதீஸ்வரன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.பொன்.செல்வராஜா,திரு.பா .அரியநேந்திரன் மற்றும்   திரு.சீ. யோகேஸ்வரன்  ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் நாளைய தினம் (23.04.2012) நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் கலாசார பிரிவுத்தலைவர் திரு.க. சந்திரகுமார் அவர்களின் தலைமையில் மாலை 7.00 மணிக்கு கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.