பாலமுனையில் காணாமல் போன மாணவர் நீர் மடுவில் சடலமாக மீட்பு

(பார்ஹன் )
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பாலமுனையில் காணாமல் போன மாணவர் ஒருவர் பாலமுனையிலுள்ள நீர் மடுவில் சடலமாக இன்று கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.


புதிய பாலமுனையைச் சேர்ந்த முகம்மட் சமீன் றபீல்கான் (வயது 11) எனும் இம்மாணவன் நேற்று மாலை காணமால் போயுள்ளார்.

காணாமல் போன இம்மாணவரை குடும்பத்தினரும் பாலமுனை மக்களும் தேடி வந்த நிலையில் இன்று(11.4.2012) பாலமுனையிலுள்ள பாரிய நீர் மடுவொன்றிலிருந்து சடலமாக கிடப்பதை சிலர் கண்டுள்ளனர்.

இதையடுத்து காத்தான்குடி பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிசாரும் பொதுமக்களும் இணைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

சிகரம் புகலிடம் பாடசாலையில் கல்வி கற்கும் இம் மாணவன் விஷேட தேவையுள்ளவரென்பது குறிப்பிடத்தக்கது.