மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில்போரதீவு பகுதியில் உள்ள வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோயில்போரதீவு,பொறுகாமம் பகுதியில் உள்ள வசந்தராசா தயாபாரன்(28வயது)என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இளைஞனின் வீட்டுக்கு கொடி எடுப்பதற்காக சென்ற இளைஞர்களே சடலம் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனின் தற்கொலை தொடர்பில் சந்தேகம் நிலவுவதால் சடலம் பிரே பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.












