தாண்டியடி ஸ்ரீ சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலய மகா சங்காபிஷேகம்

 அம்பாறை மாவட்ட நிருபர்;
திருக்கோவில், தாண்டியடி ஸ்ரீ சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலய மகா  சங்காபிஷேகம் 5ம் திகதி வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு மகா
 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது
மகா சங்காபிஷேகம்  பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ. சரவணகாதீஸ்வரக் குருக்கல் (கல்லடி) தலைமையில் சர்வசாதகர் சிவப்பிரம இராஜகாந்த பத்மநாதக் குருக்கள் (திருகோணமலை) ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ. மு. கதிரவேல் குருக்கல் மற்றும் சிவஸ்ரீ.ச.தம்பிராஜா குருக்கள்,
சிவஸ்ரீ.த. நவநீதசர்மா ஆகியோர் கிரிகைகளை நடாத்தவுள்ளனர்


இவ் மகா சங்காபிஷேகம் புதன்கிழமை 4ம் திகதி வாஸ்துசாந்தியுடன்
ஆரம்பமாகி வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு மகா சங்காபிஷேகம் நடைபெறும்.
எனவே அடியார்கள் சங்காபிஷேகம் தினத்தன்று பூக்கள், பூமாலைகள்,
அபிஷேகதிரவியங்கள், என்பவற்றை தந்துதவுமாறும் ஆலய பரிபாலனசபையினர்
கேட்டுள்ளனர் இதேவேளை இவ் சங்காபிஷேகம் விழாவையிட்டு அக்கரைப்பற்று, பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபைகளினால் விசேட பஸ்சேவைகள் ஓழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் அன்னதானமும் இடம்பெறவுள்ளது
--