திவிநெகும தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஆரையம்பதியிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

--
 (Suken) திவிநெகும தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதேச மட்ட நிகழ்வு ஆரையம்பதி ,செல்வாநகர்-கிழக்கு பிரிவில் 05-04-2012 இன்று வியாழக்கிழமை 09.00 மணிக்கு கிராமசேவகர் பரிதிராஜ் தலைமையில் நடைபெற்றது.இதற்கு கெளரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.அத்துடன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. கி.குணரெத்தினம், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இத் திட்டத்தின் பயனாளிகளுக்கான பயிர் விதைகளும் வழங்கப்பட்டது.