மட்டக்களப்பு எகெட் நிறுவகத்தின் கீழ் இயங்கும் சமாதானப் பிரிவு பல்வேறு சேவைகளை மக்களுக்கு ஆற்றி வருகிறது.
அந்தவகையில் காத்தான்குடி, கல்லடி, வேலூர், நொச்சிமுனை ஆகிய இடங்களில் வாழ்கின்ற சுமார் 40 விசேட தேவையுடைய பிள்ளைகள் பெரியவர்களுக்கான விசேட நிகழ்வு காத்தான்குடி கடற்கரை திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட தேவையுடைய பிள்ளைகள் பாடல், நடனம், கதை போன்ற சிறப்பான நிகழ்வுகளை தங்களது செய்கை மூலம் வெளிப்படுத்தியது மிகவும் சந்தோசமாகவும் உற்சாகமாகவும் எல்லோருக்கும் அமைந்தது.
அதில் கலந்து கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு பார்வையாளர் இதைப்பற்றிக் கூறும்போது விசேட தேவையுடைய பிள்ளைகள் இணைந்து ஆர்வத்துடன் இவ்வாறு நிகழ்ச்சியில் பங்குபற்றுவது கவலைகள் மறைக்கச் செய்வதாகக் குறிப்பிட்டார்.
இது ஒரு பாராட்டக்குரிய விடயம் என்றும் அவர் கூறினார். அனைவர்க்கும் விசேட பொதிகள் வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது. சிறு குழுக்களால் இயங்கும் குடும்பங்களில் உள்ள விசேட தேவையுடையவர்களுக்காக இந்நிக்வு நடைபெற்றது.












