கதிரவன் சஞ்சிகையின் 10ஆவது வெளியீட்டு விழா புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் கதிரவன் சஞ்சிகையின் 10ஆவது வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மூத்த எழுத்தாளர் இரா.நாகலிங்கம் சஞ்சிகையினை பிரதம அதிதிகளுக்கு வழங்கி சஞ்சிகை வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.

சஞ்சிகையின் ஆய்வுரையினை கவிஞர் செங்கதிரோன் எம்.கோபாலகிருஸ்ணனும் ஏற்புரையை  கதிரவன் ஆசிரியர் இன்பராசாவும் நிகழ்த்தினார்.

அத்துடன் புதுக்குடியிருப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.