(யு.கே.காலித்தீன்)இவ்ஆய்வரங்கானது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் சமய ஆராதனையோடு ஆரம்பமானது.
இவ்ஆய்வரங்குக்கு பிரதம பேச்சாளராக கொரியா நாட்டின் பொகாங் விஞ்ஞான தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈயுகிகோ சுஹ் அவர்கள் கலந்து கொண்டனர்.
மேற்படி இவ்வாய்வரங்கில் இந்தியா, மலேசியா, வங்கலாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேப்பால் ஆகிய நாடுகளில் இருந்து ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்க்கபட்டிருந்தன.
இந்த ஆய்வுக்கட்டுறைகள் இரண்டு துறைசார் விற்பன்னர்கலால் பரிசிலிக்கப்பட்டு 134 கட்டுரைகள் மாத்திரமே இவ் ஆய்வரங்கில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பலிலுல் ஹக், வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி சரீனா யு.எம்.ஏ.கபுர், பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ், இஸ்லாமிய கற்கை அறவு மொழி பீட பீடாதிபதி மௌலவி ஏ.பீ. அலியார், திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், சர்வதேச ஆய்வரங்கு ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஆதம்பாவ ஜஃபர், அதன் செயலாளர் எம்.எச்.தௌபிக் ஆகியோரோடு வெங்களுர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜீ. அன்தனி, விரிவுரையாளர்கள் மற்றும் பல்வேறுபட்ட துறைசார் கல்விமான்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.


















