எல்லோரையும் மிக எளிதில் கவரும் அணுகுமுறையை கொண்ட கன்னி ராசி அன்பர்களே! சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடமான துலாமுக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. சனி 2-ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குவார்.பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும்.இது பொதுவான விதி. ஆனால் மற்றய கிரகங்களின் நிலையை ஆராய்ந்து பார்த்தால் வரும் இரண்டரை ஆண்டு காலம் கொடுமையாக அமையாது. காரணம் இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தர தயங்கமாட்டார். மேலும் சனிபகவான் 10-ம்இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். 2011 டிசம்பர் முதல் 2012 மே வரை உங்கள் சாதுர்யத்தாலும் விட்டுக் கொடுக்கும் பக்குவத்தாலும் எதையும் சமாளித்து முன்னேறலாம். அனாவசிய செலவை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளுவும் அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.வியாபாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும். புதியவியாபாரம்தொடங்குவதோ,அதிக முதலீடு போடுவதோ இப்போது வேண்டாம்.தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் அதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம். கலைஞர்கள் சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேககர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.மாணவர்கள் குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். விவசாயம் மானாவாரி பயிர்களில் சிறப்பான வருவாய் கிடைக்கும்.வழக்கு விவகாரங்கள் சுமராக இருக்கும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலனை பொறுத்தவரை கேதுவால் சிற்சில உபாதைகள் வந்தாலும் பாதிப்புகள் ஏற்படாது.பரிகாரம்- சந்தர்ப்பம் கிடைக்கும் போது திருநள்ளாறுக்கோ, திருவாதவூருக்கோ, அல்லது குச்சனூருக்கோ சென்று வாருங்கள்.வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பைரவரையும் வணங்கி வாருங்கள். 2012 ஜுன் முதல் 2012 நவம்பர் வரை குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். சனிபகவானால் ஏற்படும் பிரச்சினையை குருபகவான் கட்டுப்படுத்துவார். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபங்கள் கைகூடும். அதிக முயற்சி எடுத்தால் வீடு, மனை வாங்கலாம். அதற்காக கடன் வாங்கவும் நேரிடலாம்.உத்தியோகம் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். வேலைப்பளு குறையும். வியாபாரிகள் முன்னேற்றம் காணலாம். பத்திரிகை தொழில்,வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது எதிரிகளின் இடையூறுகள் வரத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களோடு, பாராட்டும் கிடைக்கப்பெறுவர். பொது நல ஊழியர்கள் உன்னத நிலையை அடைவர். மாணவர்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்கும். விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கும். பரிகாரம்- தொடர்ந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஆஞ்சநேயர் வழிபாட்டை நடத்துவது நல்லது. 2012 டிசம்பர் முதல் 2013 மே வரை திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியினரிடையே அன்பும், பாசமும் மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரிகள் அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்கவும். கலைஞர்கள், மாணவர்கள் நற்பலன்கள் தொடரும். விவசாயத்தில் நெல், கோதுமை சோளம், மொச்சை சிறப்பை தரும். பெண்கள் முன்னேற்றம் காண்பர். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பித்தம், மயக்கம் மற்றும் கண் தொடர்பான உபாதைகள் வரலாம். பரிகாரம்: சனி, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை செய்யுங்கள். அப்போது ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். 2013 ஜுன் முதல் 2014 மே வரை முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாத காலம். அதற்கான கவலை கொள்ள வேண்டாம். சனிபகவானின் 10-ம் இடத்துப்பார்வையால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம். செப்டம்பர், நவம்பர் மாதங்களில் புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு.உத்தியோகம் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வியாபாரிகள் வளர்ச்சி சீராக இருக்கும்.சனி மற்றும் குருவின் வக்கிர காலத்தில் தொழில் சிறப்படையும். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகள் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலை தரும். பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர். பரிகாரம்- விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.. 2014 ஜுன் முதல் 2014 டிசம்பர் வரை குடும்பத்தில்.தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டுபோகலாம் சற்று கவனம் தேவை. மனைவி வகையில் சிறுசிறு மனக்கசப்புகள் வரலாம்.உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாற்றம்கிடைக்கும்.வியாபாரிகளுக்கு அலைச்சலும், பளுவும் இருக்கும். ரசின் வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பொருள் விரையத்துக்கு வாய்ப்பு உள்ளது.கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள்.அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பர். விவசாயத்தில் நல்ல வளத்தை காணலாம். பெண்கள் பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்சினை மறையும். உடல் நலம் பித்தம், மயக்கம் மற்றும் கண் நோய் குணம்ஆகும். பரிகாரம்: ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தையும், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தையும் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.கன்னி ராசி - குருப்பெயர்ச்சி பலன்கள் 2012
எல்லோரையும் மிக எளிதில் கவரும் அணுகுமுறையை கொண்ட கன்னி ராசி அன்பர்களே! சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடமான துலாமுக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. சனி 2-ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குவார்.பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும்.இது பொதுவான விதி. ஆனால் மற்றய கிரகங்களின் நிலையை ஆராய்ந்து பார்த்தால் வரும் இரண்டரை ஆண்டு காலம் கொடுமையாக அமையாது. காரணம் இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தர தயங்கமாட்டார். மேலும் சனிபகவான் 10-ம்இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். 2011 டிசம்பர் முதல் 2012 மே வரை உங்கள் சாதுர்யத்தாலும் விட்டுக் கொடுக்கும் பக்குவத்தாலும் எதையும் சமாளித்து முன்னேறலாம். அனாவசிய செலவை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளுவும் அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.வியாபாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும். புதியவியாபாரம்தொடங்குவதோ,அதிக முதலீடு போடுவதோ இப்போது வேண்டாம்.தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் அதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம். கலைஞர்கள் சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேககர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.மாணவர்கள் குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். விவசாயம் மானாவாரி பயிர்களில் சிறப்பான வருவாய் கிடைக்கும்.வழக்கு விவகாரங்கள் சுமராக இருக்கும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலனை பொறுத்தவரை கேதுவால் சிற்சில உபாதைகள் வந்தாலும் பாதிப்புகள் ஏற்படாது.பரிகாரம்- சந்தர்ப்பம் கிடைக்கும் போது திருநள்ளாறுக்கோ, திருவாதவூருக்கோ, அல்லது குச்சனூருக்கோ சென்று வாருங்கள்.வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பைரவரையும் வணங்கி வாருங்கள். 2012 ஜுன் முதல் 2012 நவம்பர் வரை குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். சனிபகவானால் ஏற்படும் பிரச்சினையை குருபகவான் கட்டுப்படுத்துவார். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபங்கள் கைகூடும். அதிக முயற்சி எடுத்தால் வீடு, மனை வாங்கலாம். அதற்காக கடன் வாங்கவும் நேரிடலாம்.உத்தியோகம் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். வேலைப்பளு குறையும். வியாபாரிகள் முன்னேற்றம் காணலாம். பத்திரிகை தொழில்,வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது எதிரிகளின் இடையூறுகள் வரத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களோடு, பாராட்டும் கிடைக்கப்பெறுவர். பொது நல ஊழியர்கள் உன்னத நிலையை அடைவர். மாணவர்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்கும். விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கும். பரிகாரம்- தொடர்ந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஆஞ்சநேயர் வழிபாட்டை நடத்துவது நல்லது. 2012 டிசம்பர் முதல் 2013 மே வரை திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியினரிடையே அன்பும், பாசமும் மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரிகள் அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்கவும். கலைஞர்கள், மாணவர்கள் நற்பலன்கள் தொடரும். விவசாயத்தில் நெல், கோதுமை சோளம், மொச்சை சிறப்பை தரும். பெண்கள் முன்னேற்றம் காண்பர். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பித்தம், மயக்கம் மற்றும் கண் தொடர்பான உபாதைகள் வரலாம். பரிகாரம்: சனி, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை செய்யுங்கள். அப்போது ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். 2013 ஜுன் முதல் 2014 மே வரை முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாத காலம். அதற்கான கவலை கொள்ள வேண்டாம். சனிபகவானின் 10-ம் இடத்துப்பார்வையால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம். செப்டம்பர், நவம்பர் மாதங்களில் புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு.உத்தியோகம் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வியாபாரிகள் வளர்ச்சி சீராக இருக்கும்.சனி மற்றும் குருவின் வக்கிர காலத்தில் தொழில் சிறப்படையும். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகள் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலை தரும். பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர். பரிகாரம்- விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.. 2014 ஜுன் முதல் 2014 டிசம்பர் வரை குடும்பத்தில்.தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டுபோகலாம் சற்று கவனம் தேவை. மனைவி வகையில் சிறுசிறு மனக்கசப்புகள் வரலாம்.உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாற்றம்கிடைக்கும்.வியாபாரிகளுக்கு அலைச்சலும், பளுவும் இருக்கும். ரசின் வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பொருள் விரையத்துக்கு வாய்ப்பு உள்ளது.கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள்.அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பர். விவசாயத்தில் நல்ல வளத்தை காணலாம். பெண்கள் பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்சினை மறையும். உடல் நலம் பித்தம், மயக்கம் மற்றும் கண் நோய் குணம்ஆகும். பரிகாரம்: ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தையும், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தையும் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.












