கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு கிழக்கு முதல்வர் திடீர் விஜயம்

கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வெள்ளிக்கிழமை (04.05.2012) திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஆலயத்தின் பரிபாலனசபையினர் மற்றும் பொது மக்களோடு கலந்துரையாடி ஆலயத்தின் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதோடு ஆலயத்தின் தீர்த்தக் கங்கையினை  பார்வையிட்டதுடன் தீர்த்தக் கங்கையினில் எதிர்காலத்தில் எவ்வாறான நிர்மானப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களையும் ஆலய பரிபாலன சபையினரிடம் கேட்டறிந்து கொண்டார்.