தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று வியாழக்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது. வருடாந்த உற்சவத்தில், முக்கிய பூஜைகளாக இம்மாதம், 28ஆம்திகதி கல்யாணக்கால் வெட்டும் வைபவம் நடைபெறும், அத்துடன் பத்தாம் நாள் சடங்கான தீ மிதிப்பு எதிர்வரும் 2ஆம்திகதி அதிகாலை நடைபெறும். அதனைத் தொடர்ந்து 3ஆம்திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடும் நிகழ்வுடன் வருடாந்த உற்சவம் நிறைவு பெறும். ஆலய பிரதம குருக்களான சிவஸ்ரீ சிதம்பர சாந்தரூப ஐயா, க.சித்திரவேல் ஆகியோரால் கிரிஜைகள் நடத்தப்படும். உற்சவ தினங்களில் நண்பகல் பூஜை பகல் ஒரு மணிக்கும், இரவு பூஜை நான்காம் நாள் வரை இரவு எட்டுமணிக்கும், அதன் பின்னர் இரவு 10 மணிக்கும் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.