அம்பாறை மத்தியமுகாம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரத்தில் ஆற்று மண் ஏற்றிய ஒருவருக்கு தண்டப் பணமாக 15 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி புதன்கிழமை உத்தரவிட்டார்.
மத்தியமுகாம் ஆற்றில் சட்டவிரோதமாக திங்கட்கிழமை காலை உழவு இயந்திரத்தில் ஆற்று மண் ஏற்றிய ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவரை புதன்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஏ.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 15 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவரை புதன்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஏ.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 15 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.












