(கிருஸ்ணா)
கிழக்குப் பல்கலைக்கழக பேரவையில் புதிதாக நியமிக்கப்பட்டவரை மாற்றுவதுடன், மீண்டும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒரவர் நியமிக்கப்படுவம் வரையில் ஒருவார காலமாக நடைபெற்றுவரும் தமது விரிவுரைப் பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அருட்தந்தை சிறிதரன் சில்வஸ்ரரின் மரணமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டவரது நியமனம் உபவேந்தரின் பரிந்துரை எதுவும் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை இரத்துச் செய்து மீண்டும் ஒர சமூக அக்கறையும் செயற்பாட்டுத்திறனும் மிக்க பாதிரியார் சமூகத்தில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும்.
எம்முடைய போராட்டத்தில் மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம், கல்லடியிலுள்ள விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவன மாணவர்களும் இணைந்துள்ளதுடன், அம்பாறை மாவட்ட மாணவர் ஒன்றியமும் இணைந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றுகூடலில், கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களுக்கமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு விரிவுரைப் பகிஷ்கரிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது என மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணகாந்த தெரிவித்தார்.
இந்த விரிவுரைப் பகிஸ்கரிப்பு காரணமாக, வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்கள், கல்லடியிலுள்ள விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், சௌக்கிய பராமரிப்பு பீடம் ஆகியவற்றின் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் இம் மாதத்துக்கான அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் மிக்க ஒரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்றுவருகின்ற சிக்கல் தொடர்பில் தமிழ் சமூகம் அக்கறை இன்றி இருப்பது குறித்து கவலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
30 வருட பாரம்பரியம் கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது நடைபெற்று வரும் இவ்வாறான பிரச்சினைகள் எதிர்காலத்திலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் சமூக அக்கறையாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.