அவுஸ்திரேலியாவை சென்றடைந்தது மேலும் ஒரு அகதிப்படகு



அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவை கடந்த வாரத்தில் மாத்திரம், 3 இலங்கை அதிகளின் படகுகள் சென்றடைந்த நிலையில், இலங்கையில் இருந்து மேலும் பல அகதிப் படகுகள் அந்த பகுதியை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், கொக்கோஸ் தீவின் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பகுதியில் மேலதிக கண்காணிப்பு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்றைய தினம் மற்றுமொரு அகதிப் படகு அவுஸ்திரேலியாவை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் இலங்கையில் இருந்து வந்த 35 அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.