வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா

(கிருஸ்ணா) (படங்கள்:சஞ்சீவ்)
ஒரு இனத்தின் அடையாளம் அவனது இருப்பை பறைசாற்றுகின்றது.அம்பாறை மாவட்ட தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயமாகும்.
இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இந்த தேர்த்திருவிழாவில் சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அலங்கரிக்கப்பட்ட யானையின் பவனியுடன் வசந்தமண்டபத்தில் இடம்பெற்ற விசேடபூசையின் பின்னர் சுவாமியும் தேர் முட்டியும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேர் உற்சவம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பெண்கள் ஒரு புறமாகவும் ஆண்கள் ஒரு புறமாகவும் தேர் வடம் இழுத்துவரும் காட்சி அனைவரையும் மெய்சிலிக்கவைத்தது.

சீர்பாத தேவியினால் கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயமானது இலங்கையின் வரலாற்றில் தமிழ் மன்னர்களின் எழுச்சியை காட்டிநிற்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் விரட்டப்பட்டு அவர்களது இடங்களை சுவிகரிக்கமேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இந்த சிந்தாயாத்திரை பிள்ளையாரால் முறியடிக்கப்பட்டதாக இந்த கிராம மக்கள் இன்னும் நம்புகின்றனர்.