பிரித்தானிய புலப்பெயர்வு கொள்கையில் மாற்றம்


குடும்பத்துடனான புலப்பெயர்வு கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவிருப்பதாக, பிரித்தானியா நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், சர்வதேச ரீதியாக குற்றவாளிகளின் பரம்பலை கட்டுப்படுத்தவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிதிரீதியாக தங்களை தன்னிறைவுக்கு உட்படுத்திக் கொள்ள கூடிய புலம்பெயரும் குடும்பங்களுக்கு மாத்திரமே, இனிவரும் நாட்களில் பிரித்தானியாவில் குடியேற அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் ஜுலை மாதம் 9ம் திகதி முதல் அமுலாக்கப்படவுள்ளன.

இந்த புதிய திருத்தத்தின் படி, பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படுதல் என்பது சாதாரண விடயமாக ஆக்கப்பட்டுள்ளது.

12 மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகின்ற புலம்பெயர்ந்த ஒருவரை, சாதாரணமாக நாடுகடத்த இந்த கொள்கை திருத்தத்தின் கீழ் சட்டத்துக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.