பெற்றோரை இழந்த பாடசாலை மாணவி மீது பலாத்தகாரமாக பாலியல்வல்லுறவு புரிந்தவர் கைது


(அம்பாரை மாவட்ட நிருபர்)
பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் 12வயது பாடசாலை மாணவி ஒருவரை பலாத்தகாரமாக பாலியல்வல்லுறவு புரிந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் செவ்வாய்க்கிழமை நேற்று உத்தரவிட்டார் என பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்

கோமாரி செல்வபுரம் இரண்டாம் பிரிவு பிரதேசத்தில் தாய் தந்தையை இழந்து அம்மம்மாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வரும் 12 வயது பாடசாலைச் சிறுமியை அவரது உறவினரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடையவர் சம்பவதினமான திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் அம்மம்மா கோவிலுக்கு சென்ற போது தனிமையில் இருந்த போது சிறுமியின் வீட்டிற்கு சென்ற உறவினரான இவர் தனது தாயாரைக் காணவில்லை எனவும் அவரை தேடிப்பார்ப்பதற்காக தன்னுடன் வருமாறு சிறுமியை வருமாறு அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சவுக்கு காட்டிற்குள் கூட்டிச்சென்று பலாத்தகாரமாக பாலியல்வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்
இதன்போது சிறுமியின் அலறல்சத்தம் கேட்டு பிரதேச இளைஞர்கள் அங்கு சென்று பாலியல்வல்லுறவில் ஈடுபட்டவரை மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன் புhதிக்கப்பட்ட சிறுமியை பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் பொத்துவில் இன்பெட்டர் ஏற்றத்தை சேர்ந்த .இவர் மனைவியுடன் எற்பட்ட சண்டையையடுத்து இவரின் பிறந்த ஊரான செல்வபுரத்திரல் தாயாரின் வீட்டில் தங்கியருந்த போதே மதுபோததையில் இந்த சம்பவத்தில் ஈடுபடடுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆயர்படுத்தியபோது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்