கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கபடிப்போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி சம்பியன்

(கிருஸ்ணா)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கபடிப்போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணியும் தெகியத்தன்கண்டிய தேசிய பாடசாலை  அணியினரும் மோதினர்.

இதன்போது 14-7 என்ற புள்ளி வித்தியாசத்தில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கபடிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து 30 பாடசாலை அணிகள் பங்குபற்றின.