கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஆறு நூல்களின் வெளியீடு

(கிருஸ்ணா)

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதன்முறையாக விவசாய பீடத்தினால் விவசாயத்தில் பேண்தகு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆறு நூல்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிட்டுவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு, மகாஜன கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பீடாதிபதி கலாநிதி சோமசுந்தரம் சுதர்சன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார், கிழக்குப்பல்கலைக்கழக பதிவாளர் க.மகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளும் அவற்றுக்கான வளமாக்கியை பெறும்வழிகள் குறித்து ஆராயப்பட்டு தீர்வுகள் அடங்கியதாக இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் சூழல் பாதுகாப்பு,காலநிலையும் விவசாயமும் சேதன வளமாக்கிகள்,தாவர பீடைநாசினிகள்,மனித ஆரோக்கியம் ஆகியவற்றையும் இந்த இதழ்கள் தாங்கியுள்ளன.

இதேபோன்று உயர்தர பாடசாலை மாணவர்கள் பயன்பெரும் வகையிலும் இந்த நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கதாகும்.