வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது

(கிருஸ்ணா)

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று பிரசித்திபெற்ற ஆலயங்களுள் ஒன்றான வீரமுனை ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்த உற்சவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

மூல மூர்த்திக்கு விசேட பூசைகள் இடம்பெற்று யானை மீது தண்டை கொண்டுசெல்லப்பட்டு ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தீர்த்தக்கேணியில் தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

இந்த தீர்த்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.