(நிலவன் )
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த பணிபகிஸ்கரிப்பு காரணமாகவும், நிர்வாக சீர்கேடுகள் காரணமாகவும் பல உள்வாரி பட்டதாரி மாணவர்கள் பட்டதாரி நியமனத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர் நியமனத்திற்கு 2010,2011ம் ஆண்டு பட்டங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக நேற்றையதினம் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு சென்று கிழக்கு பல்கலைக் கழககத்தில் தங்களுக்கான தரநிலைச்சான்றிதழை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பல பாடங்களுக்குறிய பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவும் தங்களுக்கான பட்டதாரிச்தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ளமுடியாமல் உள்ளதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் முறையிட்டுள்ளனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கிழக்குப பல்கலைக்கழகத்தில் உள்வாரியாக பயின்ற மாணவர்களே இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவதால் இந்தமாணவர்கள் குறித்து உடனடி கவனம் செலுத்துமாறு கிழக்குப்பல்கலைகழக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உறுதியளித்துள்ளார்.