அக்கரைப்பற்று பொத்துவில் நெடுஞ்சாலையில் கோமாரி பகுதியில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சாரதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை இந்த நெடுஞ்சாலையில் சீமெந்து மற்றும் பொருட்களை ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்ற இந்த வான் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது சாரதியைத் தவிர வேறு எவரும் வானில் இருக்கவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.