இலங்கையர்கள் உள்ளிட்ட சிலர் அரசியல் தஞ்சம் கோரி நேற்றிரவு அவுஸ்திரேலிய -
கிறிஸ்மஸ் தீவிற்கு படகு மூலம் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிய மீன்பிடி படகு ஒன்றில் அதிகம் ஆண்களை உள்ளடக்கிய சுமார் 39 அகதிகள் இவ்வாறு கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகில் இருந்த அகதிகள் இன்று காலை அவுஸ்திரேலிய கடற்படையினர் சோதனை செய்தபோது சிரித்த முகத்துடன் கையசைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளை அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் ஒன்றுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினமும் 53 இலங்கை அகதிகளை ஏற்றிய மீன்பிடி படகு அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த இலங்கையர் ஒருவருக்கு அம்மை நோய் ஏற்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சொறி அல்லது அரிப்பு இருக்கும் அகதிகளுக்கு சிக்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தகவல்கள் குறிப்பிடுகின்றன.