19ஆண்டுகளின் பின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதித்துவ ஆசனத்தை கடந்த மாநகர சபைத் தேர்தலில் உறுதிப்படுத்திய AHHM நபார் JP தற்போது இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இக் கட்சியின் சார்பான வேட்ப்பாளராக போட்டியிடவுள்ளார். மேலும் இவர் ஐ.தே.கட்சியின் இளையவர் முன்ணணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகவும் அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லீம் பிரதேசங்களுக்கான கட்சியின் தற்காலிக அமைப்பாளராகவும் மற்றும் அகில இலங்கை சமய கலாசாரத்துக்கான இணைப்புச் செயலாளராகவும் வெளிநாட்டுத் தொடர்புகளுக்கான இணைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 2011 முகாமைத்துவ விஷேடத்துவ பட்டதாரியும் மாணவப் பேரவைத் தலைவராகவும் விளையாட்டுப் பேரவைத் தலைவராகவும் விளையாட்டுப் பேரவையின் ஆலோசனை சபையின் உறுப்பினராகவும் தற்ப்போதைய கல்முனை மாநகர சபையின் விளையாட்டு மற்றும் கலாசார நிலையியற் குழுவின் தவிசாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4
















