BATTINEWS ன் தேடலில் இன்றைய பாடசாலை ஈச்சிலம்பற்று ஸ்ரீ சண்பக மாகா வித்தியாலம்


(அன்ரனி) ஈச்சிலம்பற்று ஸ்ரீ சண்பக மாகா வித்தியாலமானது திருகோணமலை கல்வி மாவட்டத்திலும் மூதூர் கல்வி வலையத்திலும் அமைந்துள்ளது. இப்பாடசாலையின் தற்ப்போதய அதிபராக திரு.ப.மதிபாலசிங்கம் அவர்கள் கடமையாற்றுகிறார். இப்பாடசாலையானது 1848 இந்து மிஷனரி மூலம் ஆரம்பிக்கப்பட்டு 1902ல் அரசாங்கப் பாடசாலையாக பிரகடணப்படுத்தப்பட்டது. இது ஒரு கலவன் பாடசாலை. தற்ப்போது இப்பாடசாலையில் 22 ஆசிரியர்களும் 710 மாணவர்களும் உள்ளனர். சென்ற வருடம் இப் பாடசாலை மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 9 இடங்களைப் பெற்றனர். இம்முறை 4 இடங்களைப் பெற்றுள்ளனர் விபரங்கள் வருமாறு

1. N.ரதிஸ்வரன் 21 வயதிற்க்குட்ப்பட்ட ஆண்கள் பிரிவில் 400 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் தங்கப்பதக்கமும் 400 மீட்டர் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும்
2. N.ஜிவானந்தினி 19வயதுப் பிரிவில் 800 மீட்டர் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும்
3. 4x400 மீட்டர் 21 வயதுக்குட்ப்பட்ட ஆண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றனர்
இவ் மாணவர்களின் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் ம.சித்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இலை காய் மறைவாய் இருக்கும் எமது மாணவர்களை ஊக்குவிப்பது யார்?????

இப் பாடசாலை 2006ல் யுத்தத்தினால் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு 2007 இறுதிப்பகுதியிலேயே மீழ் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாடசாலையில் காணப்படும் குறைகள்
       1. குடி நீர் வசதி இன்மை, தவிக்கும் மாணவர்கள்
       2. தளபாட வசதியின்மை
       3. விளையாட்டு உபகரணங்கள் இன்மை

விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள தகுந்த பயிற்ச்சிகளை மேற்க்கொள்வதற்கு தகுந்த உபகரணங்களை வளங்குவது யார்?????

வலயக்கல்வி மேலதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்க்கு!!!!!!!!