
இந்தப் பாடசாலையில் ஆசிரியைகள் தங்கியிருந்த விடுதியினுள் 09-07-2012 திங்கட்கிழமை காலை ஆசிரியைகள் சென்று பார்த்த போது தங்கள் தங்குமிடத்தினுள் சனி அல்லது ஞாயிறு அன்று இனம் தெரியாத விஷமிகள் அத்துமீறி நுழைந்து தங்கள் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டும் தங்களது ஆடைகள் வெட்டப்பட்டும் சுவர்களில் தகாத வார்தைகள் எழுதப்பட்டும் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அதிபரிடம் முறைப்பாடு செய்த பின்னர் அதிபரின் கட்டளைப்படி எழுதியிருந்தவை அழிக்கப்பட்டன. பின்னர் ஒருசிலரால் இதை செய்தது ஆசிரியர்கள் என்று கூறப்பட்டபடியால் ஆசிரியர்கள் சிலர் அதிபரிடம் முறையிட்டனர் அதிபருடன் இவர்கள் பேசும் போது பேசியதை ஒலிப்பதிவும் செய்துள்ளனர். அதிபரினால் இப்பிரச்சினை தீர்கப்படாமல் ஆசிரியர்கள் வலயக்கல்வி அதிகாரியிடம் முறையிட்டனர். அவரால் கூட இப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை ஆனால் அதிபரும் சரி அதிகாரியும் சரி போலீசில் முறைப்பாடு கொடுக்கவில்லை. இதனை அடுத்து 13பேர் கொண்ட ஆசிரியர் குளாம் போலீஸில் 16-07-2012 அன்று முறைப்பாடு செய்தது தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இப்பிரட்சனைக்கு இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. இவ்விடயமானது வெளியுலகிற்கு தெரியப்படுத்தப்படவில்லை என்று பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் விசனப்படுகின்றனர். இப்பிரச்சனையால் ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இப்பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் மாணவர்களது கற்றல் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற இடமளிக்க வேண்டும்.


