பாலத்தில் வீழ்ந்து யாழ் இளைஞன் பலி


தம்பலகாமம் - கிண்ணியா வீதியில் சிவத்த பாலத்திலிருந்து வீழ்ந்து யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் நேற்று(10/07/2012) பிற்பகல் பலியானார்.
யாழ்ப்பாணத்திலிருந்து தம்பலகாமம் பிரதேசத்தில் குடும்ப நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்கான சென்றிருந்த போதே அவர் இந்த அனர்த்திற்கு முகம்கொடுத்தார்.

பாலத்தில் மீது நடந்து சென்றபோது,  அவரின் தேசிய அடையாள அட்டை பாலத்திற்கு கீழான ஆற்றில் வீழ்ந்த நிலையில், அதனை மீட்க முயன்ற போது நீரில் மூழ்கி மரணமானதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார். அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.