'நாட்டிய மயில்' நடனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவி மூன்றாம் இடம்

(கிருஸ்ணா)

இந்து பௌத்த கலாசார பேரவையினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட 'நாட்டிய மயில்' நடனப் போட்டியில் மட்டக்களப்பை கிருபாகரன் துவாரகா  மூன்றாம் இடத்தை தட்டிக்கொண்டார்.

இது தொடர்பிலான விருது வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 25 போட்டியாளர்களில்; இறுதிச் சுற்றுப் போட்டிக்கு  தெரிவான மூன்று போட்டியாளர்களுக்கிடையில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இதில் ஒரு ஆண்போட்டியாளரும் இரண்டு பெண் போட்டியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இப்போட்டியில் முதலாம் இடத்தினை கணேசலிங்கம் பவனும்;; இரண்டாம் இடத்தினை தங்கலிங்கம் வேலோஜியும்; மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பை சேர்ந்த  கிருபாகரன் துவாரகா  பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் திலங்க சுமதிபாலா, அத்துரலிய ரத்தனதேரர், வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகனேசன், வாழ்நாள் போராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கிருபாகரன்   துவாரகா   மட்டக்களப்பின் பிரபல நாட்டிய ஆசிரியை சுமித்திரா கிருபாகரனின் புதல்வியாவார்.