ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தடைப்பட்டிருக்கும் பல்கலைகழக மாணவர்களின் கல்வி

 நேற்றைய தினம்(30/07/2012) சேவைக்கு சமூகமளிக்குமாறு உயர்கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தாலும் தமது பணி பகிஷ்கரிப்பை கைவிடும் நோக்கம் இல்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை சேவைக்கு சமூகமளிக்கப் போவதில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்திற்கொண்டு நேற்றைய தினம்(30/07/2012) முதல் சேவைக்கு திரும்புமாறு பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்களிடம் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அறிக்கையொன்றின் ஊடாக வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.