விரிவுரையாளர்கள் போராட்டம் - மாணவர்களே பாதிப்பு


பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைகழக மாணவர் நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த நிலையத்தின் ஊடக செயலாளர் மஹமூத் மாஜித் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதேவேளை, பல்கலைகழக விரிவுரையாளர் சங்க சம்மேளனம் ஆரம்பித்துள்ள பகிஸ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன் எடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்திற்கு, களனி பல்கலைகழக விரிவுரையாளர்களும் தமது ஆதரவினை வெளியிட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த பல்கலைகழக விரிவுரையாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.