கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான ஸ்ரீ.மு.கா. இறுதித் தீர்மானம் இன்று


கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதித் தீர்மானம் இன்று (13.07.2012) எடுக்கப்படவுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடக்கூட்டத்தின் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு முரண்பாடானான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இதனையடுத்தே கட்சியின் அதியுயர் பீடக்கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதாக என்ற இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.