(கிருஸ்ணா)
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் வலது குறைந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று இரவு 9.15மணியளவில் மாங்காடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையில் இருந்து காத்தான்குடிக்கு சென்ற மோட்டார் சைக்கிளே இவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலது குறைந்த நபர் வீதியை கடக்கு முனைந்தபோது வேகமாகவந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி சிறிது தூரத்துக்கு இழுத்துச்சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
சம்பவத்தின்போது படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.