சிறப்புப்பட்டம் பெற்று வெளியேறியுள்ள பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனத்தில் இணைத்துக்கொள்ளுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண்ட மாணவர்களையும் பட்டதாரி நியமனத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாணவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண்டு கடந்த 2011 ஆம் ஆண்டு பல்கலைகழகத்தை விட்டு வெளியேறிய போதும் ஒரு சில பாடங்களுக்கான பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தங்களுக்கான தரநிலைச்சான்றிதழில் 2012 ஆம் ஆண்டு திகதியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குறித்த மாணவர்கள்,
ஏனைய பட்டம்பெற்ற மாணவர்களுடன் கல்வி பயின்ற போதும் சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண்டதன் காரணமாகவே தாங்கள் ஒருவருடம் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும், சிறப்புபட்டம் பெற்ற தங்களையும் மேற்படி பட்டதாரி நியமனத்தில் சேர்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பொதுப்பட்டம் பெற்றவர்களுக்கும் மற்றும் வெளிவாரியாகப் பட்டம் பெற்றவர்களுக்கும் பட்டதாரி பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதும்,
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து தங்களுக்கும் பட்டதாரி பயிலுனர் நியமனங்களை வழங்குமாறு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.