மட்டக்களப்பு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பிலான ஊடகக் கருத்தரங்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் எற்பாட்டில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில், மீள்குடியேற்ற பிரதி அமைச்ர் வி.முரளிதரன், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் அரசாங்க தகவல்திணைக்கள பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல, பிரதிப்பணிப்பாளர் ஏ.ஹில்மி முஹமத், தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர், ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

அத்துடன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன், மாநகர ஆணையார் சிவநாதன் உள்ளிட்டேர்ரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், நடைபெறவுள்ள விடயங்கள், முன்னேற்றங்கள், மாற்றங்கள் எனப் பலவேறு விடயங்கள் பற்றி இச் செயலமர்வில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இச் செயலமர்வில், திணைக்களத்தலைவர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன், கொழும்பு ஊடகவியலாளர்கள், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கள விளக்கம் அளிக்கப்பட்டது.